உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் ரோட்டரி கிளப் 2025-26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி மண்டபத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். பொருளாளர் ரவி நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார். ரோட்டரி ஆளுநர் தேர்வு செந்தில்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தலைவராக மணிவண்ணன், செயலாளராக மோகன்தாஸ், பொருளாளராக முனுசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். துணை ஆளுநர் சுரேஷ் மூன்று புதிய உறுப்பினர்களை ரோட்டரியில் இணைத்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துக்கருப்பன், ஜனார்த்தனன், ராஜேந்திரன், வெங்கடேசன், திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.விழாவில், அரசு பள்ளியில் படித்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ரோட்டரி நிர்வாகிகள், பொது சேவை அமைப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை