உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18.60 லட்சம் மோசடி; வாலிபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18.60 லட்சம் மோசடி; வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக 18.60 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்,33; பொறியியல் பட்டதாரி. இவர் அரசு வேலைக்கு முயன்று வந்தார். பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., வேலை வாங்கி தருவதாக மர்ம நபர் கூறியுள்ளார்.மேலும், அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். அதை நம்பி, மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 216 தவணைகளில் மொத்தம் 18 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை.இது குறித்து கிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், திருப்பூர் மாவட்டம் படியூர் கிராமத்தை சேர்ந்த ஜேம்ஸ் தாமஸ் மகன் ஜெர்ரி மேக்ஸ்,30, என்பவர் கிருஷ்ணனை ஏமாற்றியது தெரியவந்தது. அவர், இது போல மேலும் பலரிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜெர்ரி மேக்ஸை போலீசார் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை