உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.21.15 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.21.15 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று 21.15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள் 250 மூட்டை, மக்காச்சோளம் 150, கம்பு 25, மணிலா 25, உளுந்து 10, ராகி, தேங்காய் பருப்பு தலா ஒரு மூட்டை என 457 மூட்டை விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.சராசரியாக ஒரு மூட்டை எள் 7,500 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,348, கம்பு 2,447, மணிலா 6,739, உளுந்து 3,939, ராகி 2,160, தேங்காய் பருப்பு 16,900 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக நேற்று ஒரு நாள் மட்டும், 21 லட்சத்து 15 ஆயிரத்து 521க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 30 மூட்டை, எள் 5 மூட்டை என 35 மூட்டை விளை பொருட்கள் கொண்டுவரப்பட்டது. இதில், சராசரியாக மக்காச்சோளம் 2,373 ரூபாய், எள் 9,686 ரூபாய் என 1,19,620 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.இதேபோல், தியாகதுருகம் கமிட்டியில் நெல் 55 மூட்டை, கம்பு 43, எள் 35, மக்காசோளம் 11, உளுந்து 3 மூட்டை என மொத்தம் 147 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.சராசரியாக நெல் 2,122 ரூபாய்க்கும், கம்பு 2,650, எள் 8,469, மக்காசோளம் 2,380, உளுந்து 6,365 ரூபாய்க்கு என 3, 82,159 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ