ஏ.டி.எம்., மையத்தில் ரூ.25 ஆயிரம் அபேஸ்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணிடம் பணம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா, 54; நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் தனது மகன் மற்றும் மகள் வங்கி கணக்கிற்கு தலா 40 ஆயிரம் போடுவதற்காக சென்றார்.அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி நபர், தன்னை ஏ.டி.எம்., மைய காவலாளி எனக் கூறி, பணத்தை நான் போடுகிறேன் என ஏ.டி.எம்., மையத்தில் இருந்த பில்லிங் இயந்திரத்தில் கலா கொடுத்த ரூபாயை போட்டுள்ளார். பின், அவரிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து அனுப்பியுள்ளார்.சிறிது நேரத்தில் அந்த ஏ.டி.எம்., கார்டு மூலம் 25 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்துள்ளார்.இந்நிலையில், கலாவின் மகன் போன் செய்து, 40 ஆயிரம் ரூபாயை போட்டு விட்டு 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.அப்போதுதான் தான் அவர் தன்னிடம் இருந்த ஏ.டி.எம்., கார்டு மாற்றப்பட்டிருப்பதை அறிந்தார்.இதுகுறித்து கலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.