உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் பணம் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டியை சேர்ந்தவர் அரியபுத்திரன் மகன் மணி,38; இவர் வரஞ்சரம் அருகே புதுார் மெயின்ரோட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மணி வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு மணி அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது.மேலும், அருகில் உள்ள பாண்டியன் மகன் தர்மராஜ்,32; என்பவரது மருந்து கடை, நாச்சன் மகன் கோமதுரை,25; என்பவரது ஜூஸ் கடை பூட்டினை மட்டும் மர்மநபர்கள் உடைத்தது தெரிந்தது.தகவலறிந்த வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் ராஜவேல் தடயங்களை சேகரித்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி