உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது.அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தெரிவித்ததாவது:வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி அம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆகிய 3 கோவில்களில் தினசரி மதியம் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து வருகிறது. அதற்காக இந்த 3 கோவில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை சார்பில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை