ஊரக வளர்ச்சி பணிகள்: கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தில் உள்ள, 9 ஊராட்சி ஒன்றியங்களில் கனவு இல்ல திட்டம், சாலை, குடிநீர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பிற துறைப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் முடிவுற்ற பணிகள், நிலுவைப் பணிகள், புதியப் பணிகள் துவக்கம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடந்தது. தொடர்ந்து, அரசின் திட்டப் பணிகளை உரிய காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.