உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  துாய்மை பணியாளர்கள் போராட்டம்

 துாய்மை பணியாளர்கள் போராட்டம்

திருக்கோவிலுார்: செப். 22-: திருக்கோவிலுார் நகராட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார் நகராட்சியில் துாய்மைப் பணியில் 70க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்ததைவிட குறைந்த அளவை ஊதியம் வழங்குவதாகவும், கையுறை, மழைக்கோட் என பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன் திரண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர், திவ்யா போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் பணிக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ