மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் முகாம்
07-Apr-2025
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் இருந்து பெங்களூரு மற்றும் கல்வராயன்மலையைச் சேர்ந்த கள்ளிப்பட்டுக்கு கூடுதலாக அரசு பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது.பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் அறிவண்ணல் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் மணி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் திலகவதி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை, தொ.மு.ச., மண்டல பொருளாளர் குமாரசாமி, பணிமனை செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கூடுதல் பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். கமருதீன், செங்குட்டுவன், தயாளன் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக சங்கராபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாளர்களுக்கான குளிருட்டப்பட்ட ஓய்வறை திறந்து வைக்கப்பட்டது.
07-Apr-2025