உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் - நெடுமானுார் சாலை படுமோசம் : வாகன ஓட்டிகள் அவதி

சங்கராபுரம் - நெடுமானுார் சாலை படுமோசம் : வாகன ஓட்டிகள் அவதி

சங்கராபுரம்; குண்டும் குழியுமாக கிடக்கும் சங்கராபுரம் - நெடுமானுார் சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சங்கராபரம் அடுத்த நெடுமானுார் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சங்கராபுரம் - நெடுமானுார் செல்லும் 4 கி.மீ., தார்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் சாலையில் கற்கள் பெயர்ந்து பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறி மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது. இச்சாலை வழியாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. போக்குவரத்திற்கு லாயகற்ற இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இச்சாலையை சரிசெய்ய பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக மாறியது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல், வாகன ஓட்டிகள் சேரும் சகதியும் நிறைந்த சாலையில் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். கிராம மக்களின் நலன் கருதி, சேற்றுடன் குண்டும் குழியுமாக கிடக்கும் சங்கராபுரம் - நெடுமானுார் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ