உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில சிலம்பம் போட்டியில் சங்கராபுரம் அசத்தல்

மாநில சிலம்பம் போட்டியில் சங்கராபுரம் அசத்தல்

சங்கராபுரம்:மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், சங்கராபுரம் மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.சென்னை பூந்தமல்லியில், தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்ப போட்டி, நேற்று முன் தினம் நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகம் சார்பில், 32 பேர் பங்கேற்றனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வேல் கம்பு, மான் கொம்பு, ஒற்றை வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள், 15 பேர் முதலிடம்; 10 இரண்டாம் இடம்; மற்றும் 6 பேர் மூன்றாம் இடமும் பிடித்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களை மாநில தலைவர் ரேணுகோபால், துணை தலைவர் மில்டன் ஆகியோர் பாராட்டினர். பயிற்சியாளர்கள் சூரியமுர்த்தி, தமிழ்செல்வன், விஜயகுமார்,ராகுல் பரதன் மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை