உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இல்லம் தேடி கல்வி திட்ட போட்டி சங்கராபுரம் முதலிடம்

இல்லம் தேடி கல்வி திட்ட போட்டி சங்கராபுரம் முதலிடம்

சங்கராபுரம் :இல்லம் தேடி கல்வி திட்ட போட்டியில் சங்கராபுரம் வட்டார வள மையம் முதலிடம் பிடித்தது.சங்கராபுரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் 'நம்ம ஊரு கதை' தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத்தமிழன், கணக்காளர் கமலகண்ணன், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 1171 பேர் பங்கேற்றனர். இதில் 26 கதைகள் தேர்வு செய்யப்பட்டது. சங்கராபுரம் தாலுகாவில் இருந்து 19 கதைகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை