மேலும் செய்திகள்
கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு
10-Oct-2024
திருக்கோவிலுார், : திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில், அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பில் அவரது பிறந்த நாளையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். அப்துல் கலாம் மன்ற தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார்.காலாண்டு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் சுப்ரமணி, சங்கர், பிரகாஷ், சிவா, கோவிந்தராஜ், திலீப் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Oct-2024