மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் நீதிமன்ற வளாக தூய்மை பணி
03-Oct-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மரக்கன்று நடும் விழா நடந்தது.வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார் வரவேற்றார். சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டார். குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ் குமார் முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பு தலைவர் ராஜ்குமார், மூத்த வழக்கறிஞர்கள் ஆதிசங்கர், செல்வராஜ், அரசு வழக்கறிஞர் மூர்த்தி, வழக்கறிஞர் உதவியாளர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் கார்த்தி, நீதிமன்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். சார்பு நீதிமன்ற சிரஸ்தார் ரமேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
03-Oct-2024