மேலும் செய்திகள்
உலக தாய்மொழி தின விழா
26-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நளினி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜீசஸ்சுஜி வரவேற்றார். செயலாளர் கோவிந்தராஜி, தாளாளர் திருஞானசம்பந்தம், நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்தி பேசினார். முதல்வர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, சொற்பொழிவாளர் உமா ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் ஆடல், பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நடப்பு கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் ராகேல் ஜாய்ஸ் மேரி, ரோனிட்டார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொறுப்பாசிரியர் ராகேல்ஜாய்ஸ் மேரி நன்றி கூறினார்.
26-Feb-2025