உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துப்பாக்கி சுடுதல் போட்டியில் அசத்தும் பள்ளி மாணவர்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அசத்தும் பள்ளி மாணவர்

திருக்கோவிலுார், : வில் வித்தையில் சாதித்த 5ம் வகுப்பு மாணவர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். திருக்கோவிலுார், சந்தப்பேட்டை சாய் வித்யா பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் அமீர்கான், 10; சிறு வயது முதல் குறி பார்த்து அடிப்பதில் திறமையாக இருந்தார். இதனால் மகனை சென்னை ஏகலைவன் வில்வித்தை பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி அளித்தார். காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 10 வயது உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று அமீர்கான் முதலிடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் தமிழ்நாடு ஏர் ரைபிள் அட்வான்சர் சூட்டிங் அசோசியேஷன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் அமீர்கான் பயிற்சி பெற்று வந்தார். இங்கு சமீபத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தார். மாணவர் அமீர்கானுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. வில்வித்தையில் சாதித்த சிறுவன் அமீர்கான் தற்பொழுது துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதை பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி