உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டி.எஸ்.எம்., கல்லுாரியில் அறிவியல் மன்ற விழா

டி.எஸ்.எம்., கல்லுாரியில் அறிவியல் மன்ற விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் 18ம் ஆண்டு அறிவியல் மன்ற விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாணவி ஜனனி வரவேற்றார். தெங்கியாநத்தம் பள்ளி ஆசிரியர் ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.விழாவில், மாணவ, மாணவிகளின் தொழில்நுட்ப கருவிகள் கொண்ட அறிவியல் கண்காட்சி நடந்தது.கல்லுாரி பேராசிரியர்கள் ராமு, அண்ணா கலியன், தேவி, செல்வம், சிவராமன், அர்ச்சனா உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி பேராசிரியர்கள் தேவி, பிரபாகரன் ஆகியோர் மன்றத்தை ஒருங்கிணைத்தனர். மாணவி ரிகாஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை