பெண்கள் கிரிக்கெட் அணிக்கு நாளை வீராங்கனைகள் தேர்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நாளை 20ம் தேதி மதியம் 1:30 மணிக்கு கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்.,, கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.தேர்வில் பங்கேற்கும் வீராங்கனைகள் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்கேற்கும் அனைத்து வீராங்கனைகளும் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.