மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்
26-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் டி.எம்.பள்ளியில் நடந்தது. ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நியூ பவர் பள்ளி நிர்வாகி துரை தாகப்பிள்ளை, நிறுவனர் பெரியசாமி, ரோட்டரி முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், மூர்த்தி, நடராஜன், சுதாகரன், சீனிவாசன், வெங்கடேசன், சவுந்தர், துணை ஆளுனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கோவை சங்கரா கண் மருத்துமனை டாக்டர் குழுவினர் பங்கேற்று 155 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் இன்னர்வீல் கிளப் தலைவி இந்துமதி, பொருளாளர் கலைவாணி மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
26-Oct-2025