உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறு வட்ட அளவிலான தடகள போட்டி

குறு வட்ட அளவிலான தடகள போட்டி

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறு வட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரசம்பட்டு குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஷம்ஷாத் பேகம் வரவேற்றார். சி.இ.ஓ., கார்த்திகா பங்கேற்று, தடகள போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 36 பள்ளிகளை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 100, 200, 400, 800, 1,500 மற்றும் 3,000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெற உள்ள சுற்றுக்கு தகுதி பெற்றனர். உதவி திட்ட அலுவலர் மணி, மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பொன்மணி, உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் சிவசக்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை