உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

சின்னசேலம்: கூகையூர் கிராமத்தில் கோவில் கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் ஏழு எல்லை காத்த மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 10:00 மணி அளவில் கோவிலை பூசாரி திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வெள்ளியால் ஆன உடுக்கை, வேல், பாத கவசங்கள் 2 என நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை