மேலும் செய்திகள்
சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா
18-Aug-2025
சின்னசேலம் : சின்னசேலத்தில் சுவாமி தயானந்த பவானி அருண் சேவா பெண்கள் சாத்ராலயம் இயக்கம் சார்பில் வெள்ளி விழா நடந்தது. சின்னசேலம் சேவா இயக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு சுவாமி சிதபாதானந்தா தலைமை தாங்கினார். நிர்வாகி ப்ரஹ்மானந்தலீலா, ஆசிரியர் நடராஜன், வாசவி சங்க தலைவர் வேல்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சுத்தவித்யாநந்த சரஸ்வதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் சிவதாண்டவம், திரிபுரா பாரம்பரிய நடனம், கரகம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக வாசவி சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா வழங்கப்பட்டது. சேவா இயக்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
18-Aug-2025