உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு

 ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு முகாம் நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்தது . இதன் நிறைவு விழாவிற்கு, ஆர்.கே.எஸ்., கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜி, கல்லுாரி ஆளுனர் மதிவாணன் மு ன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். கல்லுாரி பொருளாளர் மணிவண்ணன், துணை தலைவர்கள் திருஞானசம்பந்தம், ரவிசங்கர், துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக், துறை தலைவர்கள் சக்திவேல், தங்கவேலு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னை மூத்த பயிற்றுநர் அபிஷேக், பொறியியல் கல்லுாரிகளில் மட்டும் நடக்கும் ஐ.பி.எம்., பயிற்சி வகுப்புகள் முதல் முறையாக ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் வெற்றிக்கு கல்லுாரி நிர்வாகத்தின் முயற்சி பாராட்டுக்கு உரியது என தெரிவித்தார். கல்லுாரி மாணவர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள, ஐ.சி.டி., அகாடமி மற்றும் ஆர்.கே.எஸ்., கல்லுாரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். மாணவன் அச்சுதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை