சிறுசேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கோட்டக்கரை ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சிறு சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அக்.30 உலக சிக்கன தினத்தை முன்னிட்டு, சிக்கனமும் ஒரு வகைச் சேமிப்பே என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். சேமிப்பின் அவசியம் குறித்தும், சிக்கனமாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பள்ளி உதவி ஆசிரியர் வினோத் விளக்கினார். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கி வைக்கப்பட்டது.