உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண் வள தினம் விவசாயிகளுக்கு பயிற்சி

மண் வள தினம் விவசாயிகளுக்கு பயிற்சி

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு நாள் மண் வள பரிசோதனை பயிற்சி நடந்தது.ஊராட்சி தலைவர் சித்ராதாஸ் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் மோகன்ராஜ், துணை வேளாண் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்வள பாதுகாப்பு, மண் பரிசோதனையின் அவசியம், இயற்கை விவசாயத்தின் மூலம் மண் வளத்தை காப்பது.தமிழ் மண் வளம் செயலி மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளை பெறுவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ