உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்

திருக்கோவிலுாரில் தெற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்

திருக்கோவிலுார: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருக்கோவிலுாரில் 'ஓரணியில் தமிழ்நாடு' வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழ்நாடு தலைப்பின் கீழ், திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் வரவேற்றார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மண், மொழி, மானம் காக்க நாம் ஓரணி யில் திரள வேண்டும் என்பது குறித்து பேசினார். தலைமை கழக பேச்சாளர் வல்லபராசு, ஒன்றிய செயலாளர்கள் தங்கம், விஸ்வநாதன், கல்பட்டுராஜா, ரவிச்சந்திரன், பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். நகர அவை தலைவர் குணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை