உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நவராத்திரியையொட்டி சிறப்பு அலங்காரம்

நவராத்திரியையொட்டி சிறப்பு அலங்காரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் நவராத்திரியையொட்டி உற்சவர் சுவாமிகள் மலைமகள், அலைமகள் மற்றும் கலைமகள் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கள்ளக்குறிச்சி சாமியார் மடம் பகுதியில் உள்ள திருநீற்றம்மை உடனுறை செம்பொற்சோதிநாதர் கோவிலில் நவராத்திரி பண்டிகை கடந்த 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 9 நாட்களும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. கோவிலில் உள்ள 3 உற்சவர் சுவாமிகள் சக்தி, வீரம், தீரம் மற்றும் வெற்றியை தரும் தெய்வமாக கருதப்படும் 'மலைமகள்' அலங்காரத்திலும், செல்வத்தையும், பேறுகளையும் தரும் 'அலைமகள்' அலங்காரத்திலும், கல்வி, கலை மற்றும் ஞானத்தை தரும் 'கலைமகள்' அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை