உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்கள் கல்வி நலன் சிறப்பு குறைதீர் கூட்டம் 

மாணவர்கள் கல்வி நலன் சிறப்பு குறைதீர் கூட்டம் 

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் மாணவர்கள் கல்வி நலன் குறித்த சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடக்க உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் கல்வி நலன் குறித்த சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. கடந்த 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வி பயில செய்யவும், தேர்ச்சி பெறாத மாணவர்களை சிறப்பு துணைத்தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைக்கவும், கல்வி நலன் தொடர்பாக மாணவர்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பல் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர். கூட்டத்தில், மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி