உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சிறப்பு தீவிர திருத்த பணி : மேற்பார்வையாளர் ஆய்வு

 சிறப்பு தீவிர திருத்த பணி : மேற்பார்வையாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ராமன்குமார் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதி செம்மனந்தல், செங்குறிச்சி ஊராட்சியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, வாக்காளர் பட்டியல் வடக்கு மண்டல மேற்பார்வையாளர் ராமன்குமார் ஆய்வு செய்தார். ஆய்வில் விண்ணப்பப் படிவங்கள், பி.எல்.ஓ. மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்கள் குறித்து ஒட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை