உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 தனிப்பிரிவு போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் தனிப்பிரிவு போலீசாராக திருக்கோவிலுாரில் பணிபுரிந்த சுரேஷ் பகண்டைகூட்ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், ரிஷிவந்தியத்தில் பணிபுரிந்த ராமச்சந்திரன் வடபொன்பரப்பிக்கும், பகண்டைகூட்ரோட்டில் பணிபுரிந்த வேல்முருகன் ரிஷிவந்தியத்திற்கும், மணலுார்பேட்டையில் பணிபுரிந்த பெரியசாமி திருக்கோவிலுாருக்கும், வடபொன்பரப்பியில் பணிபுரிந்த சிவபாலன் மூங்கில்துறைப்பட்டுக்கும், மூங்கில்துறைப்பட்டில் பணிபுரிந்த சந்தோஷ் மணலுார்பேட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 6 தனிப்பிரிவு போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை