உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து, உள்பிரகாரம் புறப்பாடு முடிந்து மண்டபத்தில் எழுந்தருளினார். பகவத் சங்கல்பம், சாற்றுமுறை சேவையுடன், மகா தீபாரதனை நடந்தது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். சந்திர கிரகணத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. நேற்று காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை