உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அமாவாசை சிறப்பு வழிபாடு

அமாவாசை சிறப்பு வழிபாடு

மூங்கில்துறைப்பட்டு: அக் 22-: மேல் சிறுவலுார் காளியம்மனுக்கு நடந்த அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுாரில் உள்ள காளியம்மனுக்கு ஒவ்வொரு அமாவாசை இரவும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த சிறப்பு பூஜையில், காளியம்மனுக்கு மிளகாய் யாக பூஜை நடந்தது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற மிளகாய் வற்றல் வழங்கினர். அவை யாகத்தில் சேர்க்கப்பட்டது. பூஜையினை திருநங்கை ஷில்பா செய்தார். சில பக்தர்கள் சாமி வேடம் அணிந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ