உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வடக்கு நோக்கிய திசையில் குருபகவான் எருந்தருளி அருள்பாலித்து வருகிறார். வரும், 11ம் தேதி மதியம் 1:19 மணிக்கு, குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி கோவிலில் அன்றைய தினம், குருபகவானுக்கு, 16 வகை திரவியங்களை கொண்டு அபிேஷகமும், சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ