முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பலர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக வீல் சேரில் ஊர்வலமாக சென்று தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அதிவேகம் ஆபத்தானது, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக் கூடாது, வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், ஷிபா அமைப்பின் தலைவர் கருணாகரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.