உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பங்காரம் லட்சுமி கல்லுாரியில் விளையாட்டு விழா

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார்.விழாவில் திருவள்ளுவர் பல்லைக்கழக விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் (ஓய்வு) கவாஸ்கர் பங்கேற்று இளைய சமுதாய மாணவர்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் விதம், விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் வாழ்த்திப் பேசினர்.தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை