பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த வசந்த உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மூன்று தினங்களுக்கு மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை தாயார் சமேத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு குளுமை தரும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. மேலும் சுவாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்த வழிபாடுகளை தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் செய்தனர்.