உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கராபுரம்,;சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் கீதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், ஆத்மா குழு தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், உதயசூரியன் எம்.எல்.ஏ., உடனடியாக தீர்வு காணப்பட்ட 5 பேருக்கு ஆணை வழங்கி பேசினார். முகாமில் பி.டி.ஓ.,க்கள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன், தாசில்தார் வைரக்கண்ணன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திருமலைவாசன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை