உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான ஆணழகன் போட்டி

மாநில அளவிலான ஆணழகன் போட்டி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அமெச்சூர் உடற்கட்டமைப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது.கள்ளக்குறிச்சியில் 'மிஸ்டர் கோல்டன் கிளாசிக்-2025' என்ற ஆணழகன் போட்டிக்கு, சங்க மாவட்ட சேர்மன் சர்புதீன் தலைமை தாங்கினார். 'லீக் மேட்ச்' முறையில், 80, 85 என உடல் எடைக்கேற்ப 16 பிரிவுகளாக போட்டி நடந்தது. தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு, தலைவர் பாஸ்கரன், செயலாளர் பாலமுருகன் நடுவர்களாக செயல்பட்டனர்.சென்னை, கடலுார், விழுப்புரம், கோயம்புத்துார், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாடி பில்டர்கள் பங்கேற்றனர்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள், இறுதிப் போட்டிக்கு தயாராகினர். இதில், சென்னையைச் சேர்ந்த ஆண்டர்சன் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தனர். ஆண்டர்சனுக்கு மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும், பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதேபோல், பாண்டியன் இரண்டாமிடமும், சதீஷ்குமார் மூன்றாமிடமும் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி