உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய வருவாய் திறனறி தேர்வில் மாணவி சாதனை

தேசிய வருவாய் திறனறி தேர்வில் மாணவி சாதனை

மூங்கில்துறைப்பட்டு, ; சங்கராபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவி தேசிய வருவாய் திறனறி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.தேசிய அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் திறனறி தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் சங்கராபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி பூமிகா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.மாவட்டத்தில் பழங்குடியினர் பள்ளிகளில் படித்த இவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவிக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை தாங்கி மாணவிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !