பழங்குடியினர் நடுநிலைப் பள்ளியில் விடுதி கட்டடம் இன்றி மாணவர்கள் அவதி
மூங்கில்துறைப்பட்டு, ; சங்கராபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் விடுதி கட்டடம் இல்லாமல் மாணவர்கள் வகுப்பறைகளில் தங்கியுள்ளனர்.சங்கராபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி கடந்த 1966ம் ஆண்டு துவங்கப்பட்டது.முதலில் ஆரம்பப் பள்ளியாக துவங்கப்பட்ட இப்பள்ளி 2005ம் ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 100 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.இவர்களுக்கு இதுநாள் வரை தங்குவதற்கான விடுதி கட்டடம் இல்லாததால் வகுப்பறையிலேயே தங்கி பயின்று வருகின்றனர்.இப்பள்ளிக்கு விடுதி கட்டடம் தேவை என பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இப்பள்ளிக்கு நிரந்தரமாக விடுதி கட்டடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.