உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திறனறிதல் தேர்வில் வெற்றி : மாணவர்களுக்கு பரிசளிப்பு

திறனறிதல் தேர்வில் வெற்றி : மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருக்கோவிலுார்; திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடந்த துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது. இதன் பரிசளிப்பு விழாவில், ஆசிரியர் வில்வதி வரவேற்றார். சங்கரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். அறிவியல் இயக்க மாவட்ட கருத்தாளர் ஜானகிராமன் பேசினார். ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ