உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூட்டுறவு சர்க்கரை  ஆலையில் கரும்பு அரவை நிறுத்தம் 

கூட்டுறவு சர்க்கரை  ஆலையில் கரும்பு அரவை நிறுத்தம் 

கள்ளக்குறிச்சி : கன மழை மற்றும் வெள்ளம் பாதிப்பு காரணமாக மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆலையின் செயலாட்சியர் கண்ணன் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக மூங்கில்துறைப்பட்டு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆலைக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும், தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஆலையின் குடியிருப்புக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.இதுவரை மின் சப்ளை வராததாலும், ஆலையின் உட்பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் மின் மோட்டார்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.இதனால் ஆலையின் கரும்பு முற்றத்தில் தேங்கியுள்ள கரும்புகள் அரவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆலையில் கரும்பு அரவை விரைவாக துவங்குவதற்கு சீரமைப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை