மேலும் செய்திகள்
சான்றிதழ் வழங்கும் விழா
13-Apr-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நோயாளிகளுக்கு மெத்தை விரிப்புகள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சியில் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில், நலப்பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நோயாளிகளுக்கான மெத்தை விரிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமாள், கோவிந்தராஜன் ஆகியோர் நலப்பணிகள் இணை இயக்குனர்கள் மாலினி மற்றும் செந்தில்குமாரிடம் மெத்தை விரிப்புகளை வழங்கினர்.நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சுப்ரமணியன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அபிஷேக், பிருந்தா, வசிபா, நிகிதா, மருந்தாளுனர் சுதா, செவிலியர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-Apr-2025