மேலும் செய்திகள்
தாசில்தார் பொறுப்பேற்பு
05-Aug-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக திருமலை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றிய பாஸ்கர், கள்ளக்குறிச்சி மண்டல துணை தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுச் சென்றார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தலைமை உதவியாளராக பணியாற்றிய திருமலை சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக நேற்று காலை பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
05-Aug-2025