உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கிளைச் சிறைக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி கிளைச் சிறைக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் கிளைச் சிறைக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். சான்றோர் பேரவை தலைவர் ஆசுகவி ஆராவமுதன், கல்லைத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் அம்பேத்கார், இணைச் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.கல்லைத் தமிழ்ச் சங்கமம் அரங்கன் வள்ளியம்மை கவிதாலயம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தமிழறிஞர்கள் கோமுகி மணியன், சண்முகம் பிச்சப்பிள்ளை, ஜெயப்பிரகாஷ், டாக்டர் உதயகுமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி கிளைச் சிறை கண்காணிப்பாளர் மாரியப்பனிடம் 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற பேராசிரியர் சீனிவாசன், அப்துல்கரீம், அருள்ஞானம், பழனிவேல், முத்துசாமி, கோவிந்தன், வெங்கடாஜலபதி பங்கேற்றனர். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை