தமிழ்ப் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள், அன்னையர் தினம், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற சண்முகம் பிச்சப்பிள்ளைக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.தமிழ்ப் படைப்பாளர் சங்கம் சார்பில் சங்க தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். முன்னாள் தலைவர் இளையாப்பிள்ளை, இதாயதுல்லா, ரகுநந்தன், மூர்த்தி, தெய்வநாயகம் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்செம்மல் விருது பெற்ற சண்முகம் பிச்சப்பிள்ளையை பாராட்டி வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ஆசிரியர் லட்சுமிபதி, சாதிக், பாரதிகிருஷ்ணன், மதிவாணன், அம்பேத்கர், மின் வாரிய செயற் பொறியாளர் செல்வமணிஆகியோர் வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியில் அன்னையர் தினம் பற்றி இன்னர்வீல் முன்னாள் தலைவி தீபா சுகுமார் பேசினார். இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷிணி ரமேஷ், சங்க செயலாளர் ஆண்டப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.