மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் தமிழ்க் கூடல் விழா
22-Aug-2025
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் தமிழ் கூடல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பொறுப்பு அருள்மொழி வரவேற்றார். புழுதி குழும கவிஞர் ஜெயப்பிரகாஷ், கவிஞர் கனிவிஜய் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சல்மான் தலைமை தாங்கி, இலக்கியத்தின் சாராம்சம் குறித்த விழிப்புணர்வை செயல்பாடுகள் வடிவில் கதை கூறுதல், கவிதை ஒப்புவித்தல் மற்றும் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு செயல்பாடுகளுடன் விளக்கி கூறினார். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக புழுதி குடும்பத்தின் சார்பில் பள்ளி நுாலகத்திற்கு கவிஞர் கனிவிஜய் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
22-Aug-2025