தமிழ் வார விழா கையெழுத்து இயக்கம்
கள்ளக்குறிச்சி, ;பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா கையெழுத்து இயக்கம் கள்ளக்குறிச்சியில் துவங்கியது.மாவட்ட சமூக நல அலுவலகம், தொண்டு நிறுவனம் சார்பில்,கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாரதிதாசனின் பிறந்த நாள் தமிழ் வார விழா கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் பிரசாந்த் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.தமிழக அரசு சார்பில் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் நேற்று 5ம் தேதி வரை தமிழ் வாரம் என அறிவிக்கப்பட்டது.அதனையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில்பேச்சு போட்டி, கவிதை, கட்டுரை, ஓவியம், ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை சார்பில் தமிழ் வார விழா கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.நம் தாய்மொழி தமிழைப் போற்றி வளர்த்திட உறுதி ஏற்று அனைத்துத் துறை அலுவலர்களும் கையொப்பமிட்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, சமூக நல தொண்டு அறக்கட்டளை நிறுவனர் தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.