உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆசிரியர் தகுதி தேர்வு ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆசிரியர் தகுதி தேர்வு ஒருங்கிணைப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வரும் 15 மற்றும் 16ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இதில் முதல் தாள் தேர்வு 7 மையங்களில் 2,389 பேரும், 2ம் தாள் 29 தேர்வு மையங்களில் 5,240 பேரும் எழுத உள்ளனர். தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு போலீஸ் மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணியிலிருந்து 9 மணி வரை அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ