திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்பரமணியன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணைத் தலைவர் முஸ்தாக் அகமது, தாளாளர் பழனிராஜ், கல்யாணசுந்தரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியர்களின் சிறப்பான பணி குறித்து வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் மேரி போஷிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நாகித் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.